மூன்றாம் பருவத் தேர்வு 12.04.2019-க்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலை ஒட்டி பள்ளிக்கல்வித்துறை ஒரு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. அந்த உத்தரவில் இந்த கல்வியாண்டில் பள்ளி கடைசி வேலை நாள் 12.04.2019 என அரசாணை வெளியீடு உள்ளது. இதன் காரணமாக ஏற்படக்கூடிய வேலை இழப்பு நாட்களை வருகின்ற மாதங்களில் உள்ள அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் வேலை செய்து இந்த ஆண்டுக்கான வேலை நாட்களை ஈடு செய்ய உத்தரவிட்டு உள்ளது. ஏப்ரல் 6-ம் தேதியை தவிர்த்து மற்ற அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு வேலை நாட்களாக இருக்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது
மூன்றாம் பருவத் தேர்வு 1.04.2019 முதல் 12.04.2019-க்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - செயல்முறைகள் நாள் : 14.03.2019
பள்ளி கடைசி வேலைநாள் : 12.04.2019 ( வெள்ளிக்கிழமை)
மூன்றாம் பருவத் தேர்வு 12.04.2019-க்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
Reviewed by Rajarajan
on
14.3.19
Rating:

கருத்துகள் இல்லை