பிளஸ் 2 தேர்வு நாளை நிறைவடைகிறது விடைத்தாள் திருத்தும் பணி 30-ல் தொடக்கம்
பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நாளையுடன் முடிவடையும் நிலை யில், விடைத்தாள் திருத்தும் பணி கள் மார்ச் 30-ல் தொடங்குகிறது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் சமச்சீர் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கணிதம், விலங்கியல், வணிகவியல், வேதியியல் உள்ளிட்ட சில பாடங்களைத் தவிர்த்து எஞ்சிய தேர்வுகள் எளிதாக இருந்தன. இந்நிலையில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நாளையுடன் (மார்ச் 19) முடிவடைகின்றன. இறுதிநாளில் உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்குப் பதிவி யல் மற்றும் தணிக்கை பாடங் களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் 2,944 மையங்களில் 8.2 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத உள்ளனர். இதைத்தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 30-ல் ஏப்ரல் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்பின் தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி ஏப்ரல் 19-ம் தேதி வெளியாகும் என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே பிளஸ் 1 வகுப் பில் உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், ஜவுளி தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடங் களுக்கான தேர்வுகள் இன்று (மார்ச் 18) காலை நடைபெறுகிறது. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் 2,914 மையங்களில் 8 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இதைத்தொடர்ந்து மதியம் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடம் 2-ம் தாள் தேர்வு நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமைக்கப் பட்டுள்ள 3,731 தேர்வு மையங் களில் இருந்து 9.97 லட்ச மாணவ, மாணவிகள் இந்தத் தேர்வை எழுத உள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு நாளை நிறைவடைகிறது விடைத்தாள் திருத்தும் பணி 30-ல் தொடக்கம்
Reviewed by Rajarajan
on
18.3.19
Rating:
கருத்துகள் இல்லை