நீதி கதைகள் - காட்டில் ஒரு சிங்கம் ஒரு ஆட்டை அழைத்தது.
காட்டில் ஒரு சிங்கம் ஒரு ஆட்டை அழைத்தது.
"எனது வாயில் துர்வாடை வீசுவதுபோல் இருக்கிறது நீ முகர்ந்து பார்த்துவிட்டுச்சொல்...நீயும் அப்படி உணர்கிறாயா என்று" ...!
ஆடு சிங்கத்தின் திறந்த வாயை முகர்ந்து பார்த்து விட்டு ஆமாம் துர்வாடை வருகிறது என்று சொல்லிற்று.
உடனே சிங்கம்,''முட்டாளே... என்னை குறை சொல்ல உனக்கு எவ்வளவு திமிர் என்று கூறி அதன் மீது பாய்ந்து குதறியது!
அடுத்து சிங்கம் ஒரு ஓநாயை அழைத்து அதனுடைய கருத்தைக் கேட்டது.
ஓநாய் முகர்ந்து பார்த்துவிட்டு..." அப்படியொன்றையும் நான் உணரவில்லையே".. என்றது!
சிங்கம் ''மூடனே.. பொய்யா சொல்கிறாய்?'' என்று கூறி ஓநாயை அடித்துக் கொன்றது!
பின்னர் ஒரு நரியை அழைத்து அதே கேள்வியைக் கேட்டது.
நரி சொன்னது,...."'நாலு நாளா கடுமையான ஜலதோஷம்" அதனால் எனக்கு ஒரு வாசனையும் தெரியவில்லை" சிங்கம் நரியை விட்டுவிட்டது.
நீதி: ஆபத்தான காலகட்டத்தில் சமயோசிதமாக சிந்தித்து வாயைத் திறக்காதிருப்பதே புத்திசாலிகளின் செயல்!
நீதி கதைகள் - காட்டில் ஒரு சிங்கம் ஒரு ஆட்டை அழைத்தது.
Reviewed by Rajarajan
on
18.3.19
Rating:
கருத்துகள் இல்லை