தேர்தலில் பங்கு ஊழியர்களுக்கு பயிற்சி தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் வழங்கப்பட்டுள்ள உத்தரவு
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலை ஒட்டி தேர்தல் பணியில் ஈடுபட கூடிய அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சியானது நான்கு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டம் தேர்தல் பணியில் ஈடுபடக்கூடிய அலுவலர்களுக்கு ஆணை வழங்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு நாட்களுக்குள்ளாக பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சியின்போது படிவம் 12 மற்றும் 12 A தபால் ஓட்டு பதிவுக்காக வழங்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரத்தை எவ்வாறு கையாளுவது போன்ற பயிற்சி அளிக்கப்படும். இதில் PO PO1 PO2 PO3 PO4 அனைவருக்கும் பனி நிலைக்கு ஏற்ப தனி தனி குழுக்களாக 40 நபர்கள் கொண்ட எண்ணிக்கையில் அறையானது ஒதுக்கப்பட்டு இருக்கும் .இந்த முதல்கட்ட பயிற்சியானது 30.03.19 முன்பாக நிறைவடைந்து விடும். பயிற்சி நாளினை மாவட்ட கல்வி அதிகாரி முடிவு செய்வர்.
இதன் பின்பு இரண்டாம் கட்ட பயிற்சியானது எந்த தொகுதியில் தேர்தல் பணி ஒதுக்கப்பட்டு உள்ளதோ அத்தொகுதிக்கு ஊழியர்கள் செல்ல வேண்டும். அங்கு zonal offices முன்னிலையில் அவர்களுக்கு EVM எந்திரம் பயன்படுத்துதல் பயிற்சி , எஸ்எம்எஸ் அனுப்புதல் மற்றும் இதர பயிற்சிகள் ஆனது அளிக்கப்படும். இரண்டாவது கட்ட பயிற்சியானது 07.04.19 அன்று நடைபெறும்.
மூன்றாம் கட்ட பயிற்சியானது தேர்தல் நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக நடைபெறும் ஏதாவது வருகின்ற 14.04.19 அன்று நடைபெறும். இதில் எவரும் விடுபடாமல் பங்கு பெறுதல் அவசியம். இதில் அனைத்து பயிற்சிகளும் தெளிவாக வழங்கப்படும். தேர்தலில் பணிபுரியக்கூடிய அனைத்து நிலை ஊழியர்களுக்கும் ஒன்றாக இத்தருணத்தில் பயிற்சி அளிக்கப்படும். தபால் வாக்கு பதிவு ஒட்டு தேர்தலில் ஈடுபடும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுவிடும்.
தேர்தலில் பங்கு ஊழியர்களுக்கு பயிற்சி தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் வழங்கப்பட்டுள்ள உத்தரவு
Reviewed by Rajarajan
on
20.3.19
Rating:
கருத்துகள் இல்லை