+ 2 வேதியியல் தேர்வு கருணை மார்க் வழங்க தேர்வு துறை உத்தரவு
பிளஸ் 2 வேதியியலில் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கும்படி விடை திருத்தும் ஆசிரியர்களுக்கு தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது.தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில் பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 19ல் முடிந்தன. பல பாடங்களுக்கான வினாத்தாள்கள் எளிதாக இருந்தன; 2018 போல மிக கடினமான இல்லை.அதேநேரத்தில் வேதியியல் வினாத்தாளில் சில கேள்விகள் மாணவர்களை சிந்திக்க வைப்பதாக இருந்தன.அதிலும் ஆங்கில வினாத்தாளில் 33ம் எண் கேள்வி சரியாக இருந்தது. தமிழ் வினாத்தாளில் கிளர்வுறும் ஆற்றல் என்ற வார்த்தை வருவதற்கு பதில் ஆற்றல் என்ற வார்த்தை மட்டுமே இருந்தது. கிளர்வுறும் என்ற வார்த்தை விடுபட்டிருந்தது.அதனால் பல மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். இதுகுறித்து நமது நாளிதழில் செய்தி வெளியானது.பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தம் இன்று துவங்கும் நிலையில் வேதியியலில் வார்த்தை விடுபட்ட கேள்விக்கு மூன்று மதிப்பெண் கருணை மதிப்பெண்ணாக வழங்க அரசு தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது.விடைத்தாள் திருத்தத்திற்காக தயாரிக்கப்பட்ட விடை குறிப்பு மற்றும் அதற்கான மதிப்பெண் வழங்கும் முறை குறித்த உத்தரவில் இந்த அறிவுரை கூறப்பட்டுள்ளது.
+ 2 வேதியியல் தேர்வு கருணை மார்க் வழங்க தேர்வு துறை உத்தரவு
 
        Reviewed by Rajarajan
        on 
        
29.3.19
 
        Rating: 

கருத்துகள் இல்லை