Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

3, 4, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை, வரும் கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்துவதாக அரசாணை

பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில், 2020 - 2021ம் கல்வியாண்டில் 3, 4, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் மற்றும் பாடநூல் அறிமுகப்படுத்தப்படும் என ஏற்கெனவே அரசாணை வெளியிடப்பட்டது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2018-19ம் கல்வியாண்டில் 1, 6, 9, 11ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், இதனையடுத்து, 2, 7, 10, 12ம் வகுப்புகளுக்கான பாடநூல் தயாரிக்கும் பணி வரும் ஏப்ரல் மாதம் முடிவடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 3, 4, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பாடநூல்கள் தயாரிக்கப்பட்டு, வடிவமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், முதல் பருவத்துக்கான பாட நூல்களை ஏப்ரல் மாத இறுதிக்குள் வழங்க இயலும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதனால், 2020 - 21ம் ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட 3, 4, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை, வரும் கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்துவதாக அரசாணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
3, 4, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை, வரும் கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்துவதாக அரசாணை 3, 4, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை, வரும் கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்துவதாக அரசாணை Reviewed by Rajarajan on 9.3.19 Rating: 5

கருத்துகள் இல்லை