Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழ் நீதி கதைகள் - யானைப்பாகனிடம் ஒரு கேள்வி ஒன்று கேட்கபட்டது...?


இந்த யானையை அதன் காலில் சங்கிலியில் கட்டியிருக்கிறீர்களே அதை அது அறுத்துகொண்டு போகமுடியாதா என்று.
அதற்கு யானைப்பாகன் கூறினார்.அதனால் அறுத்துகொண்டு போகமுடியும் ஆனால் அப்படி போகாது என்றார்.

ஏன் என்று கேட்டபோது,அந்தயானை குட்டியாக இருந்தபோதும் இதேப்போலொரு சங்கிலியால் அதனை காலில் கட்டி போடுவார்களாம்.
அந்த குட்டியும் அதை அறுத்துகொண்டு ஓட எத்தனிக்குமாம்.ஆனால் முயன்று முயன்று போதிய வலு இல்லாத காரணத்தினால் நாளடைவில் அதன் முயற்சியை கைவிட்டு விடுமாம்.நம்மலால் முடியாது என்றொரு மைண்ட்செட்டுக்கு வந்துவிடுமாம்.

அதே குட்டி வளர்ந்து பெரிய யானையாக ஆனப்பிறகு அதனுடைய இப்போதைய வலிமையை உணராமல் தன்னால் முடியாது என்ற பழைய மனநிலையிலேயே இப்ப உள்ள சங்கிலியை அறுக்க முயலாதாம்.சங்கிலிக்கு பதிலாக ஒரு கயிறு காலில் கட்டபட்டிருந்தாலும் அதனை அறுக்க முயலாதாம்.
காலில் கட்டபட்டிருந்தால் அங்கேயே நின்னுகொள்ளவேண்டும் என்ற மனநிலைக்கு அது பழகிவிட்டது.
இந்த உதாரணம் யானைக்கு மட்டுமல்ல.நமக்கும் பொருந்தகூடியதே.
எத்தனையோ முயற்சிகளை நாம் நம்முடைய வாழ்நாளில் எடுத்திருப்போம்.அதில் ஒரு சிறு தோல்வி கிடைத்திருந்தாலும்,போச்சி,இனி அவ்ளோதான் என்ற நம்பிக்கை இழப்பு தான் நாம் அதில் வெற்றியை அடையமுடியாமல் விட்டுவிடுகிறோம்.
ஒருவகையில் நாமும் அந்த யானையை போலத்தான்.
எளிதாக அறுத்துவிடக்கூடிய கயிற்றை எப்படி தன்னால் அறுக்கமுடியாது என்ற தன்னுடைய பழைய நம்பிக்கைகுறைவிலேயே இருந்துவிடுகிறதோ அதேப்போல நாமும் பல சந்தர்பங்களில் நம்மலால் முடியாது,நமக்கு சரிபட்டு வராது,நமக்கெல்லாம் அது ரொம்ப பெரிய விஷயம் என்ற அவநம்பிக்கையே நம்மை மேலே வர பெருந்தடையாக அமைந்துவிடுகின்றன.
என்னால் முடியும்,
இதை மீண்டுமொருமுறை முயற்சிப்பேன்,
இதில் வெற்றிபெறக்கூடிய தகுதி எனக்கு இருக்கிறது,இதை அடையாமல் நான் ஓயமாட்டேன் என்ற இடைவிடாத முயற்சி, நாம் அடையவேண்டிய இலக்கை நோக்கி வெற்றிகளோடு பயணிக்க வைக்கும்.
மொத்தத்தில் தற்போது நமக்கு தேவை ஒரு ஆழமான,அழுத்தமான நம்பிக்கை.
தமிழ் நீதி கதைகள் - யானைப்பாகனிடம் ஒரு கேள்வி ஒன்று கேட்கபட்டது...? தமிழ் நீதி கதைகள் - யானைப்பாகனிடம் ஒரு கேள்வி ஒன்று கேட்கபட்டது...? Reviewed by Rajarajan on 18.3.19 Rating: 5

கருத்துகள் இல்லை