நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது, தமிழகத்தில் 48.57% மாணவ, மாணவிகள் தேர்ச்சி...
நீட் தேர்வு முடிவுகள் வெளியானது, அகில இந்திய அளவில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான தேர்வு கடந்த மே மாதம் 5-ஆம் தேதி நடைபெற்றது.தமிழகத்தில் 14 நகரங்களில் 188 மையங்கள் உள்பட நாடு முழுவதும் 154 நகரங்களில் 2,500-க்கும் மேற்பட்ட மையங்களில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என 11 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வுக்கு தமிழகத்தில் 1 லட்சத்து 40 பேர் உள்பட நாடு முழுவதும் 15 லட்சத்து 19 ஆயிரத்து 375 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில், 14 லட்சத்து 10 ஆயிரத்து 754 பேர் தேர்வு எழுதினர். 1 லட்சத்து 8 ஆயிரத்து 621 பேர் தேர்வு எழுதவில்லை.
இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. நளின் கந்தல்வால் என்ற மாணவர், 701 மதிப்பெண்கள் எடுத்து தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.அகில இந்திய அளவில் 57-வது இடம் பிடித்த ஸ்ருதி என்ற மாணவி 720 மதிப்பெண்ணுக்கு 685 மதிப்பெண்கள் எடுத்து தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.தமிழகத்தில் 48.57 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும், 9.01 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டில், 39.56 சதவீத தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது, தமிழகத்தில் 48.57% மாணவ, மாணவிகள் தேர்ச்சி...
Reviewed by Rajarajan
on
5.6.19
Rating:
கருத்துகள் இல்லை