TNPSC GROUP IV தேர்வுக்குத் தடை.: உயர்நீதிமன்றத்தில் வழக்கு - விசாரணை ஜூன் 26 ஒத்திவைப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வில் தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரும் 26ம் தேதிக்கு TNPSC பதில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஜூனியர் ஆம் தேதி அன்று இளநிலை உதவியாளர் நிலையில் உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
நேற்று முதல் இதற்கான ஆன்லைன் பதிவு தொடங்கியது இந்நிலையில் இந்த தேர்விற்கு தடை கோரி பாலமுருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் 2013ம் ஆண்டு 5,566 பணியிடங்கள் தேர்வு நடத்தப்பட்டது. அதில் 450லிருந்து 500 பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதாகவும். இந்த காலியிடங்களுக்கு 2013ல் தேர்ச்சி பெற்று காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களையே நியமிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளார். இந்தப் பணியிடங்களை புதிதாக உருவான பணியிடங்களுடன் சேர்த்து தேர்வு நடத்தக்கூடாது என்று வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கானது வரும் ஜூன் 26-ம் தேதி இந்த விசாரணைக்கு வர உள்ளது.
TNPSC GROUP IV தேர்வுக்குத் தடை.: உயர்நீதிமன்றத்தில் வழக்கு - விசாரணை ஜூன் 26 ஒத்திவைப்பு
Reviewed by Rajarajan
on
15.6.19
Rating:
கருத்துகள் இல்லை