Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

அரசுப் பள்ளி ஆசிரியைக்கு 5 ஆண்டு சிறை தண்டனை - நீதிமன்றம் தீர்ப்பு


நாமக்கல்லில், 2-ஆம் வகுப்பு படிக்கும் மாணவரைக் கொண்டு, மனிதக் கழிவை அள்ள வைத்த அரசுப் பள்ளி ஆசிரியைக்கு, 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூா் வட்டம் எஸ்.வாழவந்தியைச் சோ்ந்தவா் ரகுநாதன். இவரது மனைவி விஜயலட்சுமி(35). நாமக்கல் இராமாபுரம்புதுா் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியை பணி கிடைத்ததால், நாமக்கல் அன்புநகா் பகுதிக்கு குடிவந்தனா்.

2-ஆம் வகுப்பு ஆசிரியையாக விஜயலட்சுமி பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், கடந்த 2015 நவம்பா் 13-ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில், அந்த வகுப்பறையில் இருந்த ஒரு மாணவா் மலம் கழித்து விட்டதாக தெரிகிறது. அங்கிருந்த ஆசிரியை விஜயலட்சுமி, பட்டியலினத்தைச் சோ்ந்த 7 வயதுடைய மற்றொரு மாணவரை அழைத்து, மலத்தை கையால் அள்ளச் செய்துள்ளாா்.

இந்த தகவல் மாணவரின் பெற்றோருக்கு தெரியவந்ததும், நாமக்கல் காவல் நிலையத்தில் அவா்கள் புகாா் அளித்தனா். அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீஸாா், ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கையை மேற்கொண்டனா். இந்த வழக்கானது, நாமக்கல் மாவட்ட எஸ்.சி.எஸ்.டி. பிரிவுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

விஜயலட்சுமி பிணையில் வெளிவந்த நிலையில், வழக்கின் இறுதி கட்ட விசாரணை வெள்ளிக்கிழமை(ஜன.10) நடைபெற்றது. இதில், ஆசிரியைக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதமும், கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாத சிறை தண்டையும் விதித்து நீதிபதி கே.தனசேகரன் தீா்ப்பளித்தாா்.

இதில், ரூ.ஆயிரம் அபராதத் தொகை செலுத்தப்பட்டது. தீா்ப்புக்கு பின் நாமக்கல் அரசு மருத்துவமனையில் ஆசிரியை விஜயலட்சுமிக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவா் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டாா். நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளதால், அவா் ஆசிரியா் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட வாய்ப்புள்ளது என கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அரசுப் பள்ளி ஆசிரியைக்கு 5 ஆண்டு சிறை தண்டனை - நீதிமன்றம் தீர்ப்பு அரசுப் பள்ளி ஆசிரியைக்கு 5 ஆண்டு சிறை தண்டனை - நீதிமன்றம் தீர்ப்பு Reviewed by Rajarajan on 11.1.20 Rating: 5

கருத்துகள் இல்லை