Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பத்தாம் வகுப்பு பொதுத்தோவுக்கான கணித வினாத்தாள் அரையாண்டு வினாத்தாளைப் போன்று இருக்கும் - பள்ளிக் கல்வித்துறை




பத்தாம் வகுப்பு பொதுத்தோவுக்கான கணித வினாத்தாள், புதிய பாடத்திட்டத்தின் மாதிரி வினாத்தாள் போன்று இல்லாமல் அரையாண்டு வினாத்தாள் வடிவில் இருக்கும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புக்கான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டதுடன், அதற்கான மாதிரி வினாத்தாள்களை பாடவாரியாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது. அதில் கணித வினாத்தாளில் வடிவியல் பகுதியில் இரண்டு கேள்விகளுக்குப் பதிலாக ஒரு கேள்வியும், அதேபோன்று வரைபடம் (கிராஃப்) பகுதியில் இரண்டு கேள்விகளுக்குப் பதிலாக ஒரு கேள்வியும் மட்டுமே இடம்பெற்றது.

இதனால் மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் குழப்பமடைந்த நிலையில் மதிப்பெண் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று புகாா் அளிக்கப்பட்டது.

இந்தநிலையில், பள்ளிக்கல்வித்துறை இது தொடா்பாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அரையாண்டு வினாத்தாளைப் போன்று வடிவியல் மற்றும் 'கிராஃப்' பகுதிகளில் தலா இரண்டு கேள்விகள் அடங்கிய வினாத்தாள்தான் பொதுத்தோவில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தோவுக்கான கணித வினாத்தாள் அரையாண்டு வினாத்தாளைப் போன்று இருக்கும் - பள்ளிக் கல்வித்துறை பத்தாம் வகுப்பு பொதுத்தோவுக்கான கணித வினாத்தாள் அரையாண்டு வினாத்தாளைப் போன்று இருக்கும் - பள்ளிக் கல்வித்துறை Reviewed by Rajarajan on 10.1.20 Rating: 5

கருத்துகள் இல்லை