Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

11,12ம் வகுப்புகளில் பழைய பாடதிட்டமே தொடரும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!


Was
,
11, 12ம் வகுப்புகளுக்கு பழைய பாடத்திட்ட முறையே தொடரும் எனவும் புதிய கல்வித்திட்ட அரசாணையை ரத்து செய்தும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக பள்ளிகளை திறக்க முடியவில்லை. மேலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வும் நடத்த முடியாமல் ரத்து செய்யப்பட்டது. 12ம் வகுப்பிற்கான எஞ்சிய பாடத்திட்டங்களுக்கும் தேர்வு நடத்த முடியாமல் போனது. மேலும் ஊரடங்கு அமலில் இருப்பதாலும், 12ம் வகுப்பிற்கான கடைசி தேர்வை ஆயிரக்கணக்கான மாணவர்கள் எழுத தவறியதாலும், தேர்வு முடிவும் இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது. 


இந்நிலையில் கொரோனா பாதிப்பால் மாணவர்களில் படிப்பு சுமையை குறைக்கும் பொருட்டு 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்தது, அதில் பிரிவு 1ல் கணிதம், இயற்பியல், வேதியல் மற்றும் உயிரியல் எனவும், பிரிவு 2ல் 4 பாடத்திட்டத்திற்கு பதிலாக மூன்று பாடத்திட்ட முறையை அறிமுகம் செய்தது. மேலும் கலைப்பிரிவு மற்றும் பொருளியல் பிரிவு பாடத்திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்தது.

இந்த அறிவிப்பு மாணவர்களின் எதிர் காலத்தை பாதிக்கும் என முன்னாள் அமைச்சரான தென்னரசு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் போகும் மாணவர்கள் தேடி வரும் இடமாக பொறியியல் கல்லூரிகள் இருப்பதாகவும், அரசு அறிவித்துள்ள புதிய பாடத்திட்டத்தின் படி அவர்களால் பொறியியல் கல்விக்கு விண்ணப்பம் கூட செய்ய முடியாத சூழல் உருவாகும் என்றும் கூறினார். மேலும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் புதிய பாடத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்திற்கான அரசாணையை ரத்து செய்வதாகவும், பழைய பாடத்திட்ட திட்ட முறையே தொடரும் எனவும் தமிழக பள்ளிக் கல்வித்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளத்து. இந்த அறிவிப்பு, கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
11,12ம் வகுப்புகளில் பழைய பாடதிட்டமே தொடரும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு! 11,12ம் வகுப்புகளில் பழைய பாடதிட்டமே தொடரும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு! Reviewed by Rajarajan on 6.7.20 Rating: 5

கருத்துகள் இல்லை