மாவட்டங்களுக்குள், இன்று முதல் பொதுப் போக்குவரத்து தொடங்கியது.
Was
கொரோனா ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பொது போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஊரடங்கில் படிப்படியாக, பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல், பொதுப் போக்குவரத்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 50 சதவீத பயணிகள் மட்டுமே பேருந்துகளில் அனுமதிக்கப்படுவர் என்றும், தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதுடன், முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இன்று அதிகாலை போக்குவரத்து தொடங்கியது. முதல் நாள் என்பதாலும், அதிகாலை நேரம் என்பதாலும் மிகக் குறைந்த அளவிலேயே பயணிகள் வந்திருந்தனர். இதேபோன்று, கோவையிலும், மிகக் குறைந்த அளவு பயணிகளே வந்திருந்தனர்.
இதேபோன்று, 5 மாதங்களுக்குப் பிறகு இன்று கோயில்களும் திறக்கப்பட்டன. திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் பக்தர்கள் அதிகாலையில் சாமி தரிசனம் செய்தனர். அர்ச்சனை, அபிஷேகம் செய்தல், பூஜை பொருட்கள் கொண்டுவர பக்தர்களக்கு அனுமதி இல்லை என்றும், கடற்கரையில், நாழிகிணறு, முடிக்காணிக்கை செலுத்துதல், காதுகுத்துதல் போன்ற வேண்டுதலுக்கு அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை