1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும்
9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் “அனைவரும் தேர்ச்சி” என்று வெளியான செய்தி தவறானது என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும், 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி வரும் 6-ஆம் தேதி தொடங்கி 13-ஆம் தேதி வரை இறுதித் தேர்வுகள் நடைபெறவுள்ளன. குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு, புதுச்சேரி பள்ளி கல்வித் துறை, வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி செய்ய முடிவெடுக்கப்பட்டு இருப்பதாக அறிவித்துள்ள அம்மாநில அரசு, அடுத்த மாதம் 15-ஆம் தேதிக்குள் மாணவர்கள் ‘ஆல் பாஸ்’ செய்ததற்கான பட்டியலை தயாரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்திருந்தது. மேலும், கொரோனா பரவல் காரணமாக பாடத்திட்டங்களை முழுவதும் முடிக்காத காரணத்தால் மாணவர்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை