அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பறிக்கப்பட்ட சலுகைகள் எப்பொழுது கிடைக்கும்..!
தமிழகத்தில் கொரோனா பேரலையை கட்டுப்படுத்த தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதன் காரணமாக அரசுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை நிறுத்தி வைத்தது.
மேலும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லை என்று ஊழியர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் பணி நிரவல் கலந்தாய்வில் பணி அமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு கடந்த 2 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அத்துடன் 2 ஆண்டுகளாக வழங்கப்படாத ஈட்டிய விடுப்பு ஊதியத்தையும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். மேலும் ஆசிரியர்களது உயர்கல்விக்கான ஊக்கத்தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனால் அரசு இது குறித்து விரைவில் ஆலோசனை மேற்கொண்டு அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை