இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளி இடஒதுக்கீட்டிற்கு விண்ணப்பிக்க அறிவிப்பு
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 2022-23ஆம் கல்வி ஆண்டில் தனியார்ப பள்ளிகளில் உள்ள இடங்களில் 25 சதவீத இடங்களில் நுழைவு நிலை வகுப்புகள் (எல்கேஜி, முதல் வகுப்பு) சேர்வதற்கு இன்று முதல் மே 18 -ம் தேதி வரை rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 2022-23ஆம் கல்வி ஆண்டில் தனியார்ப பள்ளிகளில் உள்ள இடங்களில் 25 சதவீத இடங்களில் நுழைவு நிலை வகுப்புகள் (எல்கேஜி, முதல் வகுப்பு) சேர்வதற்கு இன்று முதல் மே 18 -ம் தேதி வரை rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பங்கள் சார்ந்த விவரங்களும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களும் இணையதளம், சம்பந்தப்பட்ட பள்ளி தகவல் பலகை ஆகியவற்றில் மே 21-ம் தேதி வெளியிடப்படும்.
இந்தத் திட்டத்தின்கீழ் எல்கேஜி வகுப்பிற்குச் சேர விரும்பும் குழந்தைகள் 2018 ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 2019 ஜூலை 31-ம் தேதிக்குள், ஒன்றாம் வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 2016 ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 2017 ஜூலை 31-ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்குமபோது குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவின்கீழ் விண்ணப்பிக்க ஜாதி சான்றிதழ், இவ்வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்புப் பிரிவினரின் கீழ் விண்ணப்பிக்க உரிய சான்றிதழ், பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் கீழ் உள்ள வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் ஆகியவற்றைப் பெற்றுச் சமர்ப்பிக்க வேண்டும்.பெற்றோர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் கல்வி அலுவலகங்களிலும் விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பள்ளியில் உள்ள இடங்களை விடக் கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு அந்த பள்ளியில் மே 23 -ம் தேதி அன்று குழுக்கள் நடத்தப்பட்டு சேர்க்கைக்கான குழந்தைகள் தேர்வு செய்யப்படுவர். இவர்களின் விவரம் மே 24-ம் தேதி அன்று இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட பள்ளியிலும் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கைக்குத் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளை மே 29 -ம் தேதிக்குள் பள்ளியில் சேர்க்க வேண்டும். மேலும் தகவல்கள் தேவை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்களை அணுகலாம் என தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை