Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மே 2 முதல் ஜூன் 13 வரை கோடை விடுமுறை

 மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மே 2 முதல் ஜூன் 13 வரை கோடை விடுமுறை அளிப்பது தொடர்பான முன்மொழிவு, முதன்மை மற்றும் இடைநிலைக் கல்வி இயக்குநர்கள் சார்பில் முதன்மைச் செயலருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


கோடை விடுமுறை

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2021-22ம் கல்வியாண்டு முடிவடைவதற்கு இன்னும் ஒரு சில வாரங்களே மீதமிருக்கும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் கோடை விடுமுறை மற்றும் புதிய கல்வியாண்டு தொடங்குவதற்கான காலக்கெடுவை கல்வி இயக்குனரகம் முன்மொழிந்துள்ளது. இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், மகாராஷ்டிரா முழுவதும் உள்ள பள்ளிகள் கோடை விடுமுறைக்காக மே 2ம் தேதி மூடப்பட்டு, ஜூன் 13ம் தேதி முதல் புதிய கல்வியாண்டுக்காக திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மே 2 முதல் ஜூன் 13 வரை கோடை விடுமுறை மே 2 முதல் ஜூன் 13 வரை கோடை விடுமுறை Reviewed by Rajarajan on 6.4.22 Rating: 5

கருத்துகள் இல்லை