தமிழக பள்ளிகளுக்கு இந்த ஆண்டு கோடை விடுமுறை குறித்த அறிவிப்பு!
ஓமைக்ரான் பரவல் காரணமாக ஜனவரி மாதம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டு பிப்ரவரி 1ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில், நடப்பு ஆண்டு பொதுத்தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பு அடிப்படையில் பொதுத் தேர்வுகள் மே மாதம் இறுதி வரை நடைபெ
அதன்படி அண்மையில் பொதுத் தேர்வுக்கான அட்டவணைகளும் வெளியானது. இந்த அட்டவணை படி 12 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதே போல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரையும் 10 ஆம் வகுப்புகளுக்கு மே 6ஆம் தேதி தொடங்கி 30ம் தேதி வரையிலும் தேர்வு நடைபெற உள்ளது.
மற்ற வகுப்புகளான 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வு நடத்த வேண்டும். மேலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 13ம் தேதி கடைசி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2022-23 கல்வியாண்டுக்கான அனைத்து வகுப்புகளும் ஜூன் மாதம் 13ம் தேதி தொடங்கும் மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 24ந் தேதி முதல் வகுப்புகள் நடைபெறும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு மாணவர்களுக்கு கோடை விடுமுறை நாட்கள் குறைந்த நாட்களாக விடப்படும் எனவும் ஆசிரியர்களுக்கு விடுமுறை இல்லாத ஆண்டாகவும் இருக்கும் என தெரிகிறது.
கருத்துகள் இல்லை