Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

SSLC & HSC Public Exam பணியில் ஈடுபடுவோருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு

 10,11,12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்று பொதுத் தேர்வு பணியில் ஈடுபடுவோருக்கான வழிகாட்டுதல்களை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா அனுப்பி இருக்க கூடிய சுற்றைக்கையில்; 10,11,12-ம் வகுப்பு பொதுத் தேர்வு பணிகளில் ஈடுபடுபவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.


வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் சிசிடிவி கேமரா பொறுத்தப்பட்டிருக்க வேண்டும், காவலர் பணியில் இருக்க வேண்டும், இரட்டை பூட்டு கொண்டு வினாத்தாள் கட்டுகள் இருக்கும் அறை பூட்டப்பட்டிருக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிகளுக்கு புறம்பாக தேர்வுத்துறை அதிகாரிகளை நியமிக்க கூடாது. பொது தேர்வு மையங்களுக்கு அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை முதன்மை கண்காணிப்பாளராக நியமனம் செய்ய கூடாது.

தேர்வு அறை கண்காணிப்பாளராக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் அன்றைய தேர்வு படத்திற்கான ஆசிரியராக இருக்க கூடாது, அரசு பள்ளி ஆசிரியர்களையே தேர்வு பணியில் ஈடுபடுத்த வேண்டும், தேவைப்படும் பட்சத்தில் மட்டுமே அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்களை நியமிக்கலாம் என பல்வேறு கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே திருப்புதல் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்னதாக வெளியானது. அடுத்த மே மாதம் 5-ம் தேதி முதல் பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ளது. இந்நிலையில் 115 பக்கங்கள் கொண்ட கையேடு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
SSLC & HSC Public Exam பணியில் ஈடுபடுவோருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு SSLC &  HSC Public Exam பணியில் ஈடுபடுவோருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு Reviewed by Rajarajan on 7.4.22 Rating: 5

கருத்துகள் இல்லை