OPS - பழைய ஓய்வூதிய திட்டம் ஏப்ரல் 01 முதல் அமல், தமிழகத்தில் எப்போது அமலாகும் எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள்..!
2003 ம் ஆண்டு பிறகு அரசு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை அரசு அமல்படுத்தியது. அதன்படி ஓய்வூதியம் கிடையாது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநில முதல்வர் அம்மாநில அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதன்படி மாநில அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்து பழைய மொழி திட்டத்தை 1 ஏப்ரல் 2022 முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இது அம்மாநில அரசு ஊழியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களும் கடந்த 15 ஆண்டுகளாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தற்போது ஆட்சியிலுள்ள திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப்படும் என அறிவித்திருந்தது. ஆனால் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில் மாநில அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமிழக அரசு எப்பொழுது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் என எதிர்பார்ப்பில் உள்ளனர்.
அதே நேரத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ராஜஸ்தான் மாநிலத்தில் ஏப்ரல் 1ம் தேதி முதல் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருந்தது.
தற்போது பொருளாதார சீர்திருத்தவாதிகளால் வர்ணிக்கப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டத்தை ராஜஸ்தான் மாநில அரசு வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கிறது என்பதை குறிப்பிட்டுள்ளார். அனைத்து எதிர்மறை கருத்துகளையும் முறியடித்து ராஜஸ்தான் மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்துருக்கிறது. தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதில் எந்த அரசியல் கட்சிக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. எனவே, தமிழகத்தில் 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை