எக்ஸ்இ (XE) வகை கொரோனா ஒருவருக்கு தொற்று உறுதி!
கொரோனா தொற்றினால் பல லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் காலமாயினர். கொரோனாவை கட்டுப்படுத்த அரசும் பல கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த கட்டுப்பாடுகளை மக்கள் ஓரளவுக்கு பின்பற்றியதால் தான் கொரோனா தொற்று குறைந்தது. இந்நிலையில் சீனா முதலான அண்டை நாடுகளில் மீண்டும் கொரோனா பரவி வருகிறது. இதனை தொடர்ந்து சீனாவில் பிஏ.2 என்னும் புதிய வகை உருமாற்றம் அடைந்த கொரோனா பரவி வருவதாக புதிய ஆராய்ச்சியில் உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவில் ஒமைக்ரானின் பிஏ.2 வகை புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிஏ.1 மற்றும் பிஏ.2 ஆகிய இரு வைரஸும் கலந்து எக்ஸ்இ (XE) எனும் வைரஸ் பரவி வருகிறது. மற்ற கொரோனா வைரஸை விட எக்ஸ்இ (XE) எனும் வைரஸ் வீரியம் மிக்கதாக உள்ளதாக கூறப்பட்டது.
அதிக வீரியம் மிக்க எக்ஸ்இ (XE) எனும் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் மும்பையில் ஒருவருக்கு பரிசோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முதன் முதலில் இங்கிலாந்தில் தான் எக்ஸ்இ (XE) எனும் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவுக்குள்ளும் நுழைந்துள்ளது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர்.
கருத்துகள் இல்லை