இன்று முதல் ஜூன் 5 வரை கோடை விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி அன்று தமிழகத்தில் 1-12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே நடத்த திட்டமிடபட்டிருந்த திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டது. இந்த வருடம் மே மாதம் பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மே மாதம் 13 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 12 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 24 ஆம் தேதி முதல் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த ஆண்டு பள்ளி கோடை விடுமுறை காலம் குறைந்து இருப்பதாக மாணவர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
பள்ளிகளுக்கு உள்ள கோடை விடுமுறை போலவே மாநிலத்தில் செயல்பட்டு வரும் உயர் நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை பதிவாளர் கோவிந்தராஜன் திலகவதி ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது, சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றுக்கு இன்று(ஏப்.30) முதல் ஜூன் 5 வரை கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் இந்த விடுமுறை காலகட்டத்தில் அவசர வழக்குகளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 20 நீதிபதிகளும், மதுரை கிளைக்கு 15 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை