10, 11 & 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை
கொரோனாவின் முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்டத்தில் இருந்த போது பள்ளிகள் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டு வந்தது. இந்த வகையில் மாணவர்கள் பாடத்தை கற்றாலும் பள்ளிக்கு சென்று அங்கு இருக்கும் சூழலில் பாடம் கற்பது மிகவும் சிறந்ததாக இருந்து வந்தது. இதனை இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இழந்து வந்தனர். இந்நிலையில் சென்ற இறுதியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 10,11, 12 வகுப்பு படிக்கும் மாணவர்கள் அடுத்ததாக வரவுள்ள பொதுத் தேர்வுக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.
இந்நிலையில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25ம் தேதி தொடங்குகிறது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை நடைபெறும். மேலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ஆம் தேதி தொடங்கி 30ம் தேதியும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 9ஆம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறுகிறது.
தற்போது முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் முடிந்த நிலையில் வரும் 18 ஆம் தேதியிலிருந்து 23ஆம் தேதி வரை மூன்றாவது திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அடுத்தாக, 25 ஆம் தேதி செய்முறை தேர்வுகள் தொடங்க உள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் தரப்பில் இருந்து பொதுத் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் அல்லது இரண்டாம் திருப்புதல் தேர்வுக்கான பாடத்திட்ட அடிப்படையில் பொதுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப் பட்டு வருகிறது. இதற்காக, சேலம் மாவட்டத்தில் 80 மாணவ மாணவிகள் சேர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் இவ்வாறு மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பொதுத்தேர்வு எழுதும் போது மன அழுத்தத்துடன் எழுதக்கூடாது எனவே பள்ளிக்கல்வித்துறை என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
கருத்துகள் இல்லை