மத்திய அரசின் அகவிலைப்படி 3% உயர்வு தமிழகத்தில் எப்போது வழங்கப்படும் ஊழியர்கள் சங்கம் கோரிக்கை
மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை போல, தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியது உள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அகவிலைப்படி உயர்த்தும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முடிவு முன் தேதியிட்டு 2022 ஜனவரி 01 முதல் வழங்கப்பட இருக்கிறது.மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை போல, தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியது. இது குறித்து அரசு ஊழியர்கள் சங்கம் வெளியிட்ட செய்தி குறிப்பில், ஜனவரி 1 முதல் 31% அகவிலைப்படியை 34% ஆக, அதாவது 3 சதவீத அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கும் 34 சதவீதம் அகவிலைப்படியை வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கருத்துகள் இல்லை