அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நிலை தனியார் நிறுவன ஊழியர்களை விட மோசமாக உள்ளதா..?
*CPS ஊழியர்கள் தங்களின் நிலை தனியார் நிறுவன ஊழியர்களை விட மோசமாக உள்ளது உணரமாட்டீர்களா*??🤔🤔🤔🤔
😭😭😭😭😭😭😭😭இந்த விளம்பரத்தை பாருங்கள்:
அரசு ஊழியர்களுக்கும் தனியார் நிறுவன ஊழியர்களுக்குமான வித்தியாசம் தெரியும்.
தனியாரில் பணிபுரிவர்களுக்கு உள்ள சலுகைகள் என்னென்ன வழங்கப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளவே இந்தப்பதிவு.
ESI, PF , Bonus , Gratuity, Incentives, Leave salary, GPA & Uniform
அனைத்தும் தொழிலாளர் சட்டத்தின் உரிமைகளி்ன் படி வழங்கப்படுகிறது.
இதனைப் பார்த்தால்தான் புரியும் அரசு ஊழியர்களுக்கு வழங்குவது சலுகையல்ல உரிமையென்று.
*முக்கியமான உரிமையினை இழந்துள்ளோம்*
1பென்சன் & 2கிராஜீடி
தனியார் ஊழியர்களின் PF போன்று தமிழக அரசு ஊழியர்களுக்கு CPS மட்டுமே வழங்கப்படுகின்றது.
Gratuity (DCRG) இல்லாமல் செய்யப்பட்டதை உணர்வீர்கள். கிராஜீடி தொழிலாளர்களுக்கான தனிச்சட்டம். இது CPS ஊழியர்களுக்கு இல்லாமல் செய்யப்பட்டதை உணர்வீர்கள்.
தமிழக CPS ஊழியர்கள் தங்களின் நிலையினை நிரந்தர தனியார் நிறுவன ஊழியரின் நிலையினை விட குறைவாகவும் மத்திய அரசு ஊழியர்களின் நிலையினை விட மிகக்குறைவாகவும் உள்ளது என்பதை உணராதவரை CPS லிருந்து மீள இயலாது. இன்று அரசு பணியில் உள்ள பல ஊழியர்களுக்கு இது குறித்து தகவல் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது நிசப்தமான உண்மை.
ஆண்டுகள் பல கடந்தும் எந்த மாற்றமும் செய்ய இயலவில்லை. புதிய அரசு பதவிக்கு வந்து ஒர் ஆண்டு நிறைவு பெற உள்ளது. இன்று வரை தேர்தலில் அளித்த வாக்குறுதியை பற்றி இன்று வரை எந்த பதிலும் இல்லை. நாமும் என்று போல் வரும் நாட்களில் மாற்றங்களை காண காத்து நிற்கும் அகதியாக உள்ளோம்.
கருத்துகள் இல்லை