Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஈட்டிய விடுப்பு சம்பளத்திற்கு தொடரும் தடை, அனுமதிக்க வலுக்கும் கோரிக்கை!

 தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக அரசு பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டது. அத்துடன் நெருக்கடி நிலையை சமாளிக்க அரசு ஊழியர்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு முதல் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்கள் வரை விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை எடுக்காதவர்களுக்கு ஆண்டின் முடிவில் 15 நாட்களுக்குரிய சம்பளம் எவ்வித பிடிப்பும் இன்றி வழங்கப்படும். இதனை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை என 30 நாட்கள் அதாவது ஒரு மாத ஊதியமாகவும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். ஆனால் கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக தடைவிதித்தது இருந்தது.


இந்த நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றி பெறுவதற்கு தடை தொடரும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த தடை மறு அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அத்துடன் இதனை மீண்டும் அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.




ஈட்டிய விடுப்பு சம்பளத்திற்கு தொடரும் தடை, அனுமதிக்க வலுக்கும் கோரிக்கை! ஈட்டிய விடுப்பு சம்பளத்திற்கு தொடரும் தடை, அனுமதிக்க வலுக்கும் கோரிக்கை! Reviewed by Rajarajan on 21.4.22 Rating: 5

கருத்துகள் இல்லை