Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழகத்தில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா

 


தமிழகத்திலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஐஐடியில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் பரவ தொடங்கிய ஓமைக்ரான் மெல்ல வேகமெடுத்தது. இதனால் மாநிலத்தில் கொரோனா 3ஆம் அலை ஏற்பட்டது. இதையடுத்து மாநிலத்தில் பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாகவே மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வருகிறது. இதனால் வரும் பிப். 1 முதல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 


இந்நிலையில் கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் கொரோனா மீண்டும் தலைதூக்கிய நிலையில், இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவுமோ என்ற அச்சம் அனைவரிடமும் நிலவி வந்தது. அதை உறுதி செய்யும் விதமாக , இந்தியாவில் கொரோனா பரவல் தற்போது சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது.


இதையடுத்து சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். மேலும் 700 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 30 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்தக் வகையில் 29 மாணவர்கள் மற்றும் பணியாளர் ஒருவருக்கு தொற்று உறுதி என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் நேற்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 666 பேருக்கு பரிசோதனை செய்ததில் 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


சென்னை ஐஐடியில் நேற்று மாணவர்கள் உட்பட 12 பேருக்கு தொற்று உறுதியானது என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். கொரோனா உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தாகவும், நேற்று 365 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதில் 12 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், இன்று மேலும் 666 பேருக்கு பரிசோதனை செய்ததில் 18 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை, இதனால் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது மற்றும் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.



தமிழகத்தில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தமிழகத்தில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா Reviewed by Rajarajan on 22.4.22 Rating: 5

கருத்துகள் இல்லை