Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

TNPSC Direct Recruitment to the post of District Child Protection Officer(மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ) Notification Published

 

சமூக பாதுகாப்பு துறையின் கீழ் வரும், 16 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பதவிகளை நிரப்ப போட்டித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு ஜூன் 19 ஆம் தேதி காலை மற்றும் பிற்பகலில் கணினி வழியாக நடைபெறும். இத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியுள்ளது. இந்த தேர்வானது சென்னை, மதுரை , கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் மட்டுமே நடத்தப்படும். இந்த தேர்வில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் சமூகவியல், சமூக பணி, உளவியல், குழந்தைகள் மேம்பாடு அல்லது குற்றவியல் ஆகியவற்றில் ஏதாவது ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
   

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ. 56,100 முதல் 2.05 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும். இதுவரை அரசு ஊழியர்களுக்கான துறை தேர்வுகள் மட்டுமே கணினி வழியில் நடத்தப்பட்ட நிலையில், தற்போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பதவிகளுக்கான தேர்வும் கணினி முறையில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC Direct Recruitment to the post of District Child Protection Officer(மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ) Notification Published TNPSC Direct Recruitment to the post of District Child Protection Officer(மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ) Notification Published Reviewed by Rajarajan on 4.4.22 Rating: 5

கருத்துகள் இல்லை