பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வருகை பதிவுக்கு 2 மதிப்பெண்கள் வழங்குவதில் சிக்கல்!
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - வருகை பதிவுக்கு 2 மதிப்பெண்கள் வழங்குவதில் சிக்கல்!
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – வருகை பதிவுக்கு 2 மதிப்பெண்கள் வழங்குவதில் சிக்கல்!
இந்த கல்வியாண்டில் பொது தேர்வுகளை எழுதவிருக்கும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் வருகை பதிவேட்டுக்கு 2 மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் இது குறித்த சில கேள்விகள் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மதிப்பெண்கள் வழங்கல்
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை முன்னிட்டு இந்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் தாமதமாக துவங்கப்பட்டது. இதற்கிடையில் புயல், கொரோனா 3ம் அலைப்பரவல் காரணமாக பள்ளிகள் முழுவதுமாக மூடப்பட்டு, வகுப்புகளும் சரியாக நடத்தப்படாத சூழல் காணப்பட்டது. அதே போல 2021-22ம் கல்வியாண்டுக்கான தேர்வுகள் தாமதமாக துவங்கி தாமதமாக முடிவடையக்கூடிய நிலையில் கோடை விடுமுறையும் குறைக்கப்பட்டுள்ளது. இது தவிர இந்த ஆண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மற்ற வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வாக நடத்த அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த வாரத்தில் இருந்து செய்முறை தேர்வுகள் துவங்க இருக்கின்றன. இப்போது செய்முறை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அகமதிப்பீடு வாயிலாக 10 மதிப்பெண்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 2 மதிப்பெண்கள் மாணவர்களின் வருகைப் பதிவேட்டுக்கு வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக தாமதமாக துவங்கப்பட்ட கல்வியாண்டில் மாணவர்கள் சரியாக வகுப்புகளில் கலந்து கொள்ளவில்லை என்ற தகவல்கள் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த சூழலில் சரியாக பள்ளிக்கு வராத மாணவர்கள் வருகைப் பதிவுக்குரிய 2 மதிப்பெண்களை இழக்க நேரிடும் என மாணவர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. எனவே, கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் 2 மதிப்பெண்களை அரசு வழங்க வேண்டும் என தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கிறது.
கருத்துகள் இல்லை