வேகமாக பரவும் எக்ஸ்இ புதிய வகை கொரானா திரிபு வைரஸ்..!
புதிய திரிபான எக்ஸ்இ தொற்று வேகமாக பரவி வருகிறது. இது கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்தில் முதன் முதலில் கண்டறியப்பட்டுள்ளது.இந்த நிலையில் ஓமைக்ரான் வைரஸை விட எக்ஸ்இ தொற்று வேகமாக பரவும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் எக்ஸ்இ வைரஸ் ஓமைக்ரானின் பிஏ.1 மற்றும் பிஏ.2 ஆகிய இரண்டு மாறுபாடுகளின் பிறழ்ந்த கலப்பு என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்று பிரான்ஸ், டென்மார்க், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளிலும் இது போன்ற வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
புதிய வகையான எக்ஸ்இ வைரஸ் ஓமைக்ரான் வைரசை விட 10% வேகமாக பரவும் தன்மை கொண்டதாக உள்ளது என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் மீண்டும் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படலாம் என தெரிகிறது.
வேகமாக பரவும் எக்ஸ்இ புதிய வகை கொரானா திரிபு வைரஸ்..!
Reviewed by Rajarajan
on
3.4.22
Rating:
கருத்துகள் இல்லை