10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம்: எவ்வாறு விண்ணப்பிப்பது?தமிழக அரசு அறிவிப்பு!
Was
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இ-பாஸ் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1 முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளன. 11 ஆம் வகுப்பு ஒத்தி வைக்கப்பட்ட தேர்வு ஜூன் 2-ம் தேதியில் நடத்தப்படும் என்றும், தேர்வு எழுத முடியாமல் போன 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 4-ம் தேதி தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு அம்சங்களுடன் தேர்வுகள் நடத்தப்படும் என அரசு உறுதி அளித்துள்ளது.
இந்நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கான இணையதள லிங்கையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
https://tnepass.tnega.org/#/user/pass என்ற லிங்கை கிளிக் செய்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் இ-பாஸ் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
,
10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம்: எவ்வாறு விண்ணப்பிப்பது?தமிழக அரசு அறிவிப்பு!
Reviewed by Rajarajan
on
16.5.20
Rating:
கருத்துகள் இல்லை