ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி தள்ளிவைக்கபடுமா முதுகலை ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு ?
ஆசிரியர்களுக்கு போக்குவரத்து வசதி இல்லாததால், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தத்தை, அடுத்த மாதத்துக்கு தள்ளிவைக்க, பள்ளி கல்வி துறை ஆலோசித்து வருகிறது. தமிழகத்தில், பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு விடைத்தாள்களை, திருத்தும் பணி, வரும், 27ம் தேதி துவங்க உள்ளது.'இ - பாஸ்'இதற்காக விடை திருத்தும் முதுநிலை ஆசிரியர்கள், 26ம் தேதி பணிக்கு வர வேண்டும் என, கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஆனால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் மாவட்ட எல்லைகள், 'சீல்' வைப்பால், ஆசிரியர்கள் பணிக்கு வர முடியாத சிக்கல் நிலவுகிறது. இது குறித்து, முதுநிலை ஆசிரியர்கள் கூறியதாவது: வெளி மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்கள், தாங்கள் பணியாற்றும் மாவட்டங்களுக்கு, வர போக்குவரத்துவசதியில்லை.'இ - பாஸ்' அனுமதியும் கிடைக்கவில்லை.
இதற்கிடையில், விடைத்தாள் திருத்த பணியை, இரண்டு வாரம் தள்ளி வைக்க, பள்ளி கல்வி துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஆகஸ்ட்டில் தான் உயர்கல்வி சேர்க்கை துவங்கும்; அதற்கு, ஜூலை, 15க்குள் தேர்வு முடிவு களை அறிவித்தால் போதுமானது.
எனவே, ஜூன், 8ல் விடைத்தாள் திருத்த பணிகளை துவங்கினால்,அந்த மாத இறுதிக்குள் முடிவுகளை வெளியிட வாய்ப்புஉள்ளதாக, பல்வேறு முதுநிலை ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும், அதிகாரிகளிடம் கருத்து தெரிவித்துள்ளனர்.எனவே, ஊரடங்கு முழுவதுமாக தளர்த்தப்படும் வரை, விடைத்தாள் திருத்தப் பணிகள் தள்ளி வைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி தள்ளிவைக்கபடுமா முதுகலை ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு ?
Reviewed by Rajarajan
on
22.5.20
Rating:
கருத்துகள் இல்லை