புதிய அரசு பணியிடங்களுக்கு தமிழக அரசு தடை, ஆசிரியர் பணியிடங்களுக்கு இந்த ஆண்டு போட்டி தேர்வு நடைபெறுமா?
தமிழக அரசு கொரோனாவால் முடங்கியுள்ள பொருளாதாரத்தை மீட்க புதிய பணியிடங்களுக்கு தமிழக அரசு GO 248 படி தடை விதித்துள்ளது . இதனால் அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தடையானது அனைத்து துறைகளுக்கும் அறிவிக்கபட்டுள்ளது. இதன் காரணமாக இளைஞர்களுக்கு அரசு வேலைகள் கிடைப்பது அரிதாகும்.
இதேபோல் பள்ளிக்கல்வித்துறையில் புதிய பணி இடங்கள் உருவாக்கபடாது என தெரிகிறது. எனவே முதுகலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு இந்த ஆண்டு போட்டி தேர்வு நடத்துவது கேள்விக்குறியாகிறது. கடந்த ஆண்டுகளில்ஆண்டுகளில் நடைபெற்ற போட்டி தேர்வுகளில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களை நிரப்பப்படாத நிலையில், தமிழக அரசு புதிய பணியிடத்திற்கு தடை விதித்துள்ளது. இது அரசுப் பள்ளி ஆசிரியர் வேலைக்காக காத்துக்கிடக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதிய அரசு பணியிடங்களுக்கு தமிழக அரசு தடை, ஆசிரியர் பணியிடங்களுக்கு இந்த ஆண்டு போட்டி தேர்வு நடைபெறுமா?
Reviewed by Rajarajan
on
22.5.20
Rating:
கருத்துகள் இல்லை