Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்


ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்து  தமிழக அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment Zones) தற்போது உள்ள நடைமுறைகளின் படி, எந்த விதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, (Except Containment Zones) பிற பகுதிகளில் குறிப்பிட்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.

சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர Except Containment Zones) கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. 

அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் மின்வணிக நிறுவனங்கள் (e-Commerce) ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நேரங்களில் செயல்படலாம்.


Was
உணவகங்களில் காலை 6மணி முதல் இரவு 9 வரை பார்சல் மட்டும் வழங்கலாம்.

பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், திரையரங்குகள், மதுக்கூடங்கள், கேளிக்கை கூடங்கள், சுற்றுலா தலங்கள் ஆகியவற்றுக்கான தடை தொடர்கிறது.

மெட்ரோ ரயில், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து ஆகியவற்றுக்கும் தடை நீட்டிக்கப்படுகிறது. 

SEZ, EOU & Export Units நிறுவனங்கள்:


Was
சென்னை மாநகராட்சி ஆணையர்/ மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக்கேற்ப 25% பணியாளர்களுடன் (குறைந்தது 20 நபர்கள்) செயல்பட அனுமதிக்கப்படும்.

நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும்.

முடி திருத்தகங்கள்/ அழகுநிலையங்கள் தவிர, ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமான பொருட்கள், சானிடரிவேர், எலெக்ட்ரிக்கல் பொருட்கள் மொபைல்போன், கணிப்பொறி, வீட்டு உபயோக பொருட்கள், மின் மோட்டார், கண் கண்ணாடி விற்பனை, பழுதுநீக்குதல் உள்ளிட்ட தனிக்கடைகள் காலை 11மணி முதல் மாலை 5 வரை செயல்படலாம்.

பிளம்பர், எலெக்டிரிஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள், சிறப்புத் தேவைகள் உள்ளோருக்கான உதவியாளர்கள், வீட்டு வேலை பணியாளர்கள் ஆகியோர் சென்னை மாநகராட்சி ஆணையர் /சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.


null

null
ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்து  தமிழக அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் Reviewed by Rajarajan on 2.5.20 Rating: 5

கருத்துகள் இல்லை