தேசியக் கல்விக் கொள்கை, தொழில்நுட்பக் கல்வி குறித்து பிரதமர் மோடி ஆலோசனை
Was
தேசிய கல்விக் கொள்கை மற்றும் கல்வித்துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் மோடி கல்வித்துறையினருடன் ஆலோசனை நடத்தினார்.
கொரோனா காலத்தில் பழைய கல்வி முறைக்கு மாற்றாக தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்துவது, ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.நாடு முழுவதும் சீரான கல்விக் கொள்கை, தரமான கல்வியை எல்லோரும் எளிதாக அடைவதற்கான சாத்தியங்கள், தொடக்க கல்வித் தரத்தை மேம்படுத்துவது, புதிய பாடத்திட்டங்கள் மூலமாக பன்மொழிக் கல்வியை பயிற்றுவித்தல், 21ம் நூற்றாண்டின் ஆற்றல்கள், கலை, விளையாட்டு, சுற்றுச்சூழல், பண்பாட்டு கூறுகளை உள்ளடக்கிய கல்விமுறை போன்றவை குறித்து கல்வித்துறையினருடன் பிரதமர் மோடி விரிவான ஆலோசனை நடத்தினார்.
ஆன்லைன் வகுப்புகள், வானொலி, சமூக ஊடகங்கள் வாயிலாக வகுப்புகளை நடத்துவது குறித்தும் அவர் கல்வித்துறையினரின் கருத்துகளை கேட்டறிந்தார். கல்வித்துறையில் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தவும் மோடி வலியுறுத்தினார்.
தேசியக் கல்விக் கொள்கை, தொழில்நுட்பக் கல்வி குறித்து பிரதமர் மோடி ஆலோசனை
Reviewed by Rajarajan
on
2.5.20
Rating:
கருத்துகள் இல்லை