கொரோனா வைரஸை எதிர்க்கும் ஆன்டிபாடியைக் கண்டறிந்த இஸ்ரேல் விஞ்ஞானிகள்!
கொரோனா வைரஸை எதிர்க்கும் ஆன்டிபாடியை இஸ்ரேலிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
நம் உடலுக்கு ஒவ்வாத வைரஸ்கள், பாக்டீரியாக்கள் போன்றவை உடலுக்குள் நுழையும்போது அவற்றை எதிர்க்க பிறபொருள் எதிரிகளான ஆன்டிபாடிகள் உருவாகின்றன. அவ்வாறு கொரோனா வைரஸை எதிர்க்கும் ஆன்டிபாடியை இஸ்ரேலில் உள்ள உயிரியல் ஆய்வக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து தனிமைப்படுத்தியுள்ளனர்.
கொரோனா வைரஸை எதிர்க்க இதுவரை கண்டறியப்பட்ட ஆன்டிபாடிகள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட செல்களில் இருந்து உருவாக்கப்பட்டவை. ஆனால், மோனோக்ளோனல் எனப்படும் ஒரே செல்லில் இருந்து ஆன்டிபாடியை தனிமைப்படுத்தும் முயற்சியில் இஸ்ரேல் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு காப்புரிமை பெற்ற பின்னர் ஒரு சர்வதேச உற்பத்தியாளர் மூலம் அதிக அளவில் தயாரிக்கப்படும் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸை எதிர்க்கும் ஆன்டிபாடியைக் கண்டறிந்த இஸ்ரேல் விஞ்ஞானிகள்!
Reviewed by Rajarajan
on
6.5.20
Rating:
கருத்துகள் இல்லை