திங்கள் முதல் அரசு அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் இயங்கும் - தமிழக அரசு: மே 18 முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் என்னென்ன?
மே 18 ஆம் தேதி முதல் 50% ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும். வாரத்தில் 6 நாட்கள் அரசு அலுவலகங்கள் செயல்படும். அரசு ஊழியர்களுக்கு தேவையான பேருந்து போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும்; முதல் பிரிவினர் திங்கள், செவ்வாய்யில் பணியாற்றுவார்கள்; இரண்டாவது பிரிவினர் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள்
குரூப்-ஏ அதிகாரிகள் 6 நாட்களும் பணிக்கு வரவேண்டும்.
மே 18 முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் என்னென்ன?
1. சனிக்கிழமை உட்பட வாரத்திற்கு ஆறு நாட்கள் வேலை நாட்களாக இருக்கும்.
2. எல்லா அரசு அலுவலகங்களும் பாதியளவு ஊழியர்களுடன் இயங்கும்.
3. ஊழியர்கள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு, வாரத்தின் முதல் இரண்டு நாட்களில் அதாவது, திங்கள் - செய்வாய்க் கிழமைகளில் முதல் பிரிவினர் பணியாற்றுவார்கள். அடுத்த இரண்டு நாட்கள், அதாவது புதன் - வியாழக்கிழமைகளில் அடுத்த பிரிவினர் பணியாற்றுவார்கள். வெள்ளி - சனிக்கிழமைகளில் மீண்டும் முதல் பிரிவினர் பணியாற்றுவார்கள்.
4. அதற்கு அடுத்த வாரம், இரண்டாவது பிரிவினர் திங்கள் - செவ்வாய்க் கிழமைகளில் பணியைத் துவங்குவார்கள். கடந்த வாரத்தைப் போலவே இந்த சுழற்சி தொடரும்.
5. பணியில் இல்லாத பிரிவினர், அலுவலக நேரத்தில் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டால் அவர்கள் வரவேண்டும்.
6. க்ரூப் - ஏ அதிகாரிகளும் எல்லா அலுவலகங்களின் தலைமை அதிகாரிகளும் எல்லா வேலை நாட்களிலும் பணிக்கு வரவேண்டும்.
7. எல்லா அதிகாரிகளும் அலுவலர்களும் எந்த நேரத்திலும் பணி செய்ய தயாராக இருக்க வேண்டும். எலெக்ட்ரானிக் ரீதியாக தொடர்பு கொள்ளும் வகையில் இருக்க வேண்டும்.
8. இந்த முறை, தலைமைச் செயலகம் துவங்கி மாவட்ட மட்டத்தில் உள்ள எல்லா அரசு அலுவலகங்கள், வாரியங்கள், சொசைட்டிகளுக்கும் பொருந்தும்.
9. காவல்துறை, சுகாதாரத் துறை, மாவட்ட நிர்வாகம், கருவூலம், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவை மார்ச் 25ஆம் தேதி இடப்பட்ட ஆணையின்படியே இயங்கும்.
10. தேவையான பேருந்து வசதிகள் செய்துதரப்படும். அடுத்த ஆணை வரும்வரை இந்த உத்தரவுகள் முழுமையாகப் பின்பற்றப்படவேண்டும்.
திங்கள் முதல் அரசு அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் இயங்கும் - தமிழக அரசு: மே 18 முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் என்னென்ன?
Reviewed by Rajarajan
on
15.5.20
Rating:
கருத்துகள் இல்லை