கொரோனா பரவலை தடுக்கும் முக்கிய நடவடிக்கை: எப்போது கைகளை கழுவ வேண்டும் - சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கொரோனா பரவலை தடுக்கும் முக்கிய நடவடிக்கையான கைகளை தூய்மைப்படுத்துதல் குறித்து விளக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது.
எப்போது கைகளை கழுவ வேண்டும்
1. இருமல் அல்லது தும்மல் வந்த பிறகு கைகளை கழுவ வேண்டும்.
2. உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்த பிறகு கைகளை கழுவ வேண்டும்.
3. உணவு சமைப்பதற்கு முன்பும் பின்பும் கைகளை கழுவ வேண்டும்.
4. கழிப்பறை பயன்படுத்திய பிறகு கைகளை கழுவ வேண்டும்.
5. சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கைகளை கழுவ வேண்டும்.
6. கைகளில் அழுக்கு தெரியும் போது கைகளை கழுவ வேண்டும்.
7. செல்லப் பிராணிகளுடன் தொடர்பில் இருந்த பிறகு கைகளை கழுவ வேண்டும்.
கொரோனா பரவலை தடுக்கும் முக்கிய நடவடிக்கை: எப்போது கைகளை கழுவ வேண்டும் - சென்னை மாநகராட்சி
Reviewed by Rajarajan
on
14.5.20
Rating:
கருத்துகள் இல்லை