Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழகத்தில் நாளை முதல் பேருந்துகள் இயக்கம்! - பயணிகளுக்கு இ-பாஸ் தேவையா? - முழு விவரம்




தமிழகத்தில் நாளை முதல் பேருந்து சேவையை தொடக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கரோனா பரவலை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட 4ம் கட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடைவதை ஒட்டி, ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பல்வேறு புதிய தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக மாநிலத்தில் பேருந்து சேவையை தொடங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதற்காக தமிழகம் முழுவதும் 8 மண்டலங்களாக பிரிகக்ப்பட்டுள்ளன.


8 மண்டலங்கள்:

மண்டலம் 1 : கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல்
மண்டலம் 2 : தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி
மண்டலம் 3: .விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி
மண்டலம் 4 : நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி,அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை
மண்டலம் 5 : திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்
மண்டலம் 6: தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி
மண்டலம் 7 : காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு
மண்டலம் 8 : சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி
இதில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைத் தவிர்த்து பிற பகுதிகளில் 50% பயணிகளுடன் பேருந்துகள் இயங்கலாம் என அறிவிகக்ப்பட்டுள்ளது. இதில் மண்டலஙக்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ பாஸ் தேவையில்லை. ஆனால், ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு செல்ல இ பாஸ் தேவை.
வெளி மாநிலங்களுக்கு செல்வோர் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வருவோர் இ பாஸ் பெற வேண்டும் என்பதில் எந்த தளர்வும் இல்லை.
தமிழகத்தில் நாளை முதல் பேருந்துகள் இயக்கம்! - பயணிகளுக்கு இ-பாஸ் தேவையா? - முழு விவரம் தமிழகத்தில் நாளை முதல் பேருந்துகள் இயக்கம்! - பயணிகளுக்கு இ-பாஸ் தேவையா? - முழு விவரம் Reviewed by Rajarajan on 31.5.20 Rating: 5

கருத்துகள் இல்லை