பள்ளிகள் திறப்பிற்கு பின்னர் அதிதீவிரமாக பரவிய கரோனா... பேக் வாங்கிய அரசு.
பள்ளிகள் திறப்பிற்கு பின்னர் அதிதீவிரமாக பரவிய கரோனா... பேக் வாங்கிய அரசு.
கரோனா வைரஸின் தாக்கமானது உலகம் முழுவதும் அதிகரித்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு அமலாகியிருந்தது. பின்னர் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி ஊரடங்கு நிபந்தனையுடன் தளர்த்தப்பட்டது. ஏப்ரல் 15 ஆம் தேதியே மழலையர் பள்ளி மற்றும் தொடக்கநிலை பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்ட நிலையில், சமூக இடைவெளியின் அடிப்படையில் மாணவ - மாணவிகள் பள்ளிகளில் அமரவைக்கப்பட்டனர். மேலும், சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தோற்று பரவாது என்று அங்குள்ள ஆய்வுகளின் முடிவுகள் வெளியானதை அடுத்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், அந்நாட்டின் சீரம் இன்சிடியூட் கரோனா பரவல் தொடர்பான ஆய்வு மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவில், பள்ளிகளின் திறப்பிற்கு பின்னர் கரோனா பரவல் அதிகமாக இருந்ததும், கரோனா பரவும் விகிதம் 0.6 விழுக்காடு முதல் 0.9 விழுக்காடாக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
கொரோனா அங்கு தாக்கிய நாட்கள் முதல், பள்ளிகள் திறக்கப்படும் நாட்களுக்கு முன்னதாக 6,670 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 300 பேர் உயிரிழந்து இருந்தனர். பள்ளிகள் திறக்கப்பட்ட 15 நாட்களில் 2,630 பேருக்கு கொரோனா உறுதியாகும், 160 பேர் பலியும் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், அங்குள்ள பிற நாடுகளும் பள்ளிகள் திறப்பு விஷயத்தில் நாட்களை நீட்டிப்பு செய்ய ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
பள்ளிகள் திறப்பிற்கு பின்னர் அதிதீவிரமாக பரவிய கரோனா... பேக் வாங்கிய அரசு.
Reviewed by Rajarajan
on
6.5.20
Rating:
கருத்துகள் இல்லை