பிளஸ் 2 விடைத்தாள் திருத்த மையங்களில் சி.இ.ஓ., ஆய்வு ஓசூர்: கிருஷ்ணகிரியில், மேல்நிலை
கிருஷ்ணகிரியில், மேல்நிலைக்கல்வி விடைத்தாள் திருத்தும் மையங்களில், முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு செய்தார்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 27 முதல், 2020ம் ஆண்டுக்கான பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மேல்நிலைக்கல்வி பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி துவங்கி நடந்து வருகிறது. கிருஷ்ணகிரியில் நான்கு மையங்களிலும், ஓசூரில் மூன்று மையங்களிலும் இப்பணி நடந்து வருகிறது. கிருஷ்ணகிரியில் உள்ள விடைத்தாள் திருத்தும் மையங்களில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது: விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு, சிறப்பு பஸ்கள் மூலம், ஆசிரியர்கள் தினமும் அழைத்து வரப்படுகின்றனர். சமூக இடைவெளியுடன் ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவுதல், முகக்கவசங்கள் அணிதல் போன்ற அரசின் அறிவுரையின் படியும், மொபைல்போன்களை பயன்படுத்தாமல் விடைத்தாள்கள் திருத்த வேண்டும் என்ற, அரசின் ஆணைக்கிணங்க, ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது, மாவட்ட கல்வி அலுவலர் கணபதி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்த மையங்களில் சி.இ.ஓ., ஆய்வு ஓசூர்: கிருஷ்ணகிரியில், மேல்நிலை
Reviewed by Rajarajan
on
31.5.20
Rating:
கருத்துகள் இல்லை