Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழகத்தில் செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

 





தமிழகத்தில் வருகிற செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவம் & மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.


பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆண்டு இறுதித்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆன்லைன் கல்வியில் நாட்டம் இல்லாததால் பல மாணவர்களும் வேலைக்கு செல்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் விரைவில் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்க வேண்டும் என பெற்றோர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. பள்ளிக் கல்வித்துறையும் இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டது.


அதன்படி வருகிற செப்டம்பர் 1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்க தமிழக அரசு உத்தேசித்து உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக நேற்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவில் வருகிற ஆகஸ்ட் 20ம் தேதி முதல்வருடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்து இறுதி முடிவு வெளியாகும் என அமைச்சர் தெரிவித்தார். தற்போது பள்ளிகள் திறப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவம் & மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டு உள்ளது.


50% மாணவர்களுடன் வகுப்புகள் நடைபெற வேண்டும்.

சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து பணியாற்ற உத்தரவு.

கொரோனா பரவலை தடுக்க 6 அடி இடைவெளியில் மாணவர்களை அமர வைக்க வேண்டும்.

மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம்.

அனைத்து வகுப்பறைகளிலும் சானிடைசர், சோப் கலந்த நீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

நோய் அறிகுறிகள் உள்ள மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் அனுமதி இல்லை.

வைட்டமின் மாத்திரைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தமிழகத்தில் செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு! தமிழகத்தில் செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு! Reviewed by Rajarajan on 18.8.21 Rating: 5

கருத்துகள் இல்லை