Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

அரசு பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் நியமனம் அரசு நடவடிக்கை


தமிழகத்தில் செப்., 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்தும், கூடுதல் ஆசிரியர் பணி நியமனம் குறித்த நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.


ஆசிரியர் நியமனம்:
தமிழகத்தில் கடந்த 13ம் தேதி முதல் பட்ஜெட் தாக்கல் நடந்தது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பல திட்டங்கள் மற்றும் கருத்துக்கள் குறித்து மக்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எதிர்க்கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், அரசின் வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சி மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பாக மாவட்ட மைய நூலகத்தில் நூலகர் தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், மதுரையை தொடர்ந்து திருச்சியிலும் கலைஞர் நினைவு நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் நிச்சயமாக வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும். இதற்காக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பள்ளிகள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளிகளை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதனால் ஆசிரியர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. முன்னதாக ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு பணிகள் முடிக்கப்பட்டவுடன், முதல்வருடன் ஆலோசித்து கூடுதல் ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் ஏறத்தாழ 37,579-க்கு மேல் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது. இதனால் பள்ளிகளின் கட்டமைப்பு, ஆசிரியர் தேவை போன்ற விவரங்கள் மாவட்ட கல்வி அலுவலரிடம் சேகரிக்கும் பணிகள் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
அரசு பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் நியமனம் அரசு நடவடிக்கை அரசு பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் நியமனம் அரசு நடவடிக்கை Reviewed by Rajarajan on 21.8.21 Rating: 5

கருத்துகள் இல்லை