COVID vaccine 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டு 40 ஆயிரம் பேருக்கு கொரோனா!
கொரோனா இரண்டாம் அலை சற்று குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் நோய் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதில் கேரளாவில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு நோய் தொற்று பாதித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
கொரோனா பெரும்தொடானது 2ம் அலையில் உலகையே உலுக்கியது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தளர்வுகள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் நோய் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது கேரள மாநிலத்தில் நோய் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் தடுப்பூசி 2 டோஸ் செலுத்தி கொண்டவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை மீறி நோய் தொற்று பரவுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரம் என பதிவாகி வரும் நிலையில் அதில் 20 ஆயிரத்திற்கு மேல் கேரளாவில் பதிவாகியுள்ளது. தேசிய அளவில் 67.7% மக்களிடம் நோயெதிர்ப்பு உருவாகியுள்ள நிலையில், கேரளாவில் அது 42.7% ஆக உள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கும் தொற்று கண்டறியப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது.
கேரள மாநில சுகாதார அதிகாரி கூறியதாவது இரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட சுமார் 40 ஆயிரம் பேரிடம் கோவிட் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்றும் கேரளா மாநிலத்தின் பத்தனம்திட்டாவில் இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது எனவும் கூறியுள்ளார். முதல் டோஸ் தடுப்பூசி போட்ட பின் 14,974 பேருக்கு நோய் தொற்று கண்டறிய பதாகவும் 2 வது டோஸ் தடுப்பூசியும் போட்டுள்ள 5,042 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது எனவும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை