CET ஆசிரியர் தகுதித்தேர்வு வினாத்தாளில் மாற்றம் CBSE அறிவிப்பு!
இந்தியாவில் மத்திய, மாநில அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்குக்கு மட்டுமே அரசு ஆசிரியர் பணி வழங்கப்படுகிறது இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள்கள் மாற்றம் செய்யப்படும் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. புதிய கல்விக்கொள்கை அடிப்படையில் வினாத்தாள்கள் வடிவமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தேர்ச்சி சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்ற நடைமுறை இருந்தது. இந்த நிலையில் கடந்த மே மாதம் மத்திய மாநில ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களின் தேர்ச்சி சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என மத்திய அரசு தெரிவித்தது.
இந்த நிலையில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள்கள் மாற்றம் செய்யப்படும் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டது. அதனை அடிப்படையாக கொண்டு மத்திய ஆசிரியர் கல்வி தகுதித் தேர்வின் வினாத்தாள் வடிவமைக்கப்படும் எனவும் தேர்வு எழுதும் ஆசிரியர்களின் சிந்தனை திறனை மதிப்பிடும் வகையில் கேள்விகள் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 1 ஆண்டு காலமாகவே கல்வி இணையதளம் வாயிலாக கற்பிக்கப்பட்டு வருகிறது. எனவே ஆசிரியர்கள் டிஜிட்டல் வழி கற்பித்தல் முறையை,சோதனை செய்யும் வகையில் வினாக்கள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆன்லைன் வழியில் நடத்தப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.
CET ஆசிரியர் தகுதித்தேர்வு வினாத்தாளில் மாற்றம் CBSE அறிவிப்பு!
Reviewed by Rajarajan
on
3.8.21
Rating:
கருத்துகள் இல்லை