IAS அதிகாரியின் மாத ஊதியம் எவ்வளவு தெரியுமா?
இந்திய அரசுத்துறைகளில் மிக முக்கிய பணியிடமாக கருதப்படும் IAS அதிகாரிகள் ஒரு மாதத்திற்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.2.50 லட்சம் வரை ஊதியம் பெறுகிறார்கள். இந்த ஊதியம் அவர்களது பணியிடங்களை பொறுத்து வேறுபடுகிறது.
மாத ஊதியம்
பொதுவாக ஒரு அரசுத்துறை பணியாளர்களை தேர்வு செய்வதற்காக நடத்தப்படும் தேர்வுகளில் மிக கடினமானது என்றால் அது IAS அதிகாரிகளுக்காக நடத்தப்படும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என்று சொல்லக்கூடிய UPSC தேர்வு தான். மற்ற எல்லா தேர்வுகளை போல இந்த UPSC தேர்வுகளை எழுதுவது சாதாரண காரியமில்லை. அதற்கு முறையான பயிற்சி அவசியமாகும். இந்த தேர்வில் வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் இந்திய நிர்வாக சேவை மூலம் நாட்டின் அதிகாரத்துவ அமைப்பில் பணிபுரியும் வாய்ப்பை பெறுகிறார்கள்.
மேலும் பல்வேறு மத்திய மற்றும் மாநில அமைச்சகங்கள், நிர்வாகத் துறைகளில் IAS அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்த தேர்வுக்காக கடின உழைப்பை கொடுக்கும் ஒவ்வொரு IAS அதிகாரிகளும் அதற்கேற்ற அளவு மாத ஊதியத்தை பெறுகின்றனர். அதாவது 7 வது சம்பள கமிஷனின் படி, ஒரு IAS அதிகாரியின் அடிப்படை சம்பளம் ரூ. 56100 என கணக்கிடப்பட்டுள்ளது. இதனுடன் அனைத்து மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் பயணக் கொடுப்பனவு மற்றும் அகவிலைப்படி உதவித்தொகை உட்பட பல சலுகைகளும் IAS அதிகாரிகளுக்கும் வழங்கப்படுகின்றன.
ஆனால் IAS அதிகாரி ஒருவரின் மொத்த சம்பளம் மாதத்திற்கு ரூ.1 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என அறிக்கை கூறுகிறது. அதே நேரத்தில், ஒரு IAS அதிகாரி கேபினட் செயலாளர் அந்தஸ்தை அடைந்தால், அவருடைய சம்பளம் மாதம் ரூ.2,50,000 ஆகும். இதனுடன் IAS அதிகாரிகளுக்கு ஜூனியர் ஸ்கேல், சீனியர் ஸ்கேல், சூப்பர் டைம் ஸ்கேல் உள்ளிட்ட பல்வேறு பே பேண்டுகளும் கொடுக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில், அந்த அதிகாரிகளுக்கு குடியிருப்பு, சமையல்காரர் மற்றும் பிற பணியாளர்கள் உட்பட பல வசதிகள் வழங்கப்படுவது கூடுதல் தகவல்.
கருத்துகள் இல்லை