தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ஆக குறைப்பு இல்லை – வெளியான தகவல்!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு துறைகளில் பணிபுரிபவர்கள் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 58 ஆக குறைக்கலாம் என அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ள நிலையில் தற்போது அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக குறைக்கப்படாது என தகவல்கள் தெரிவிக்கின்றது. தமிழக அரசு நிதி நெருக்கடியை மனதில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் போது அவர்களுக்கான நிதி உடனுக்குடன் வழங்கப்பட்டு வந்தது.
கொரோனா பரவலின் காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியால் ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு நிதி வழங்க முடியாத காரணத்தால் ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 59 ஆக உயர்த்தி மாற்றி அமைக்கப்பட்டது. அதே போல கொரோனா பேரிடர் காலம் தொடர்ந்து வந்ததால் நிதி நெருக்கடியின் காரணமாக ஓய்வு பெறும் வயது மீண்டும் அதிகரிக்கப்பட்டு 60 ஆக மாற்றப்பட்டது. ஓய்வு பெறும் வயதை உயர்த்தாமல் இருந்திருந்தால் தமிழகத்திற்கு கூடுதலாக ரூ.5000 கோடி தேவைப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.
தற்போது அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 58 ஆக குறைக்கும் பட்சத்தில் தமிழகத்திற்கு தற்போது 7000 கோடி ரூபாய் தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. தற்போதிருக்கும் நிதி நிலைமையின் அடிப்படையில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 லிருந்து 58 ஆக குறைப்பது தற்போது சாத்தியமற்றது என்பதனால் இந்த திட்டத்தை தள்ளி வைக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ஆக குறைப்பு இல்லை – வெளியான தகவல்!
Reviewed by Rajarajan
on
7.8.21
Rating:
கருத்துகள் இல்லை