Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழகத்தில் புதிய ஊரடங்கு தளர்வுகள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க உத்தரவு



தமிழகத்தில் முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்த ஊரடங்கு வரும் 23ம் தேதி அன்றுதான் நிறைவு பெறவுள்ளதால் மீண்டும் தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அவற்றில் தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளோடு கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு அரசாணை வெளியாகியுள்ளது. தற்போது தமிழகத்தில் கூடுதலாக வழங்கப்பட்டுள்ள தளர்வுகளை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். இந்த தளர்வுகளுடன் ஊரடங்கு ஆனது வரும் 06.09.2021 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள்:
  • அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும்‌ 01.09.2021 முதல்‌ சுழற்சி முறையில்‌ வகுப்புகள்‌ நடத்த அனுமதிக்கப்படும்‌. இதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்புடைய துறையின்‌ செயலாளர்கள்‌ வழங்குவார்கள்‌. பள்ளிகள மற்றும் கல்லூரிகளில்‌ பணிபுரியும்‌ ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்‌ அல்லாத பணியாளர்கள்‌ அனைவரும்‌ தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்‌.
  • அனைத்து பட்டயப்‌ படிப்பு வகுப்புகள்‌ சுழற்சி முறையில்‌ நடத்த அனுமதிக்கப்படும்‌. ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்‌ அல்லாத பணியாளர்கள்‌ அனைவரும்‌ தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்‌.
  • நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி, 50% பார்வையாளர்களுடன்‌ 23- 8- 2021 முதல்‌ திரையரங்குகள்‌ இயங்க அனுமதிக்கப்படும்‌. திரையரங்கப்‌ பணியாளர்கள்‌ அனைவருக்கும்‌ தடுப்பூசி போடப்பட்டிருப்பதை அரங்க உரிமையாளர்கள்‌ உறுதி செய்து கொள்ளவேண்டும்‌.
  • கடற்கரைகளில்‌ பொதுமக்கள்‌ அனுமதிக்கப்படுவர்‌. இப்பகுதிகளில்‌ அமைந்துள்ள கடைகளின்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ சிறுவியாபாரிகள்‌ அனைவருக்கும்‌ தடுப்பூசி செலுத்திட மாநகராட்சி/மாவட்ட ஆட்சியர்கள்‌ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்‌.
  • உயிரியியல்‌ பூங்காக்கள்‌, தாவரவியல்‌ பூங்காக்கள்‌, படகு இல்லங்கள்‌ ஆகியவை நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • இதுவரை இரவு 09.00 மணி வரை அனுமதிக்கப்பட்ட அனைத்து கடைகள்‌ மற்றும்‌ செயல்பாடுகளும்‌ 28- 9- 2021- லிருந்து இரவு 10.00 மணி வரை, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • தகவல்‌ தொழில்நுட்பம்‌ / தகவல்‌ தொழில்நுட்பம்‌ சார்ந்த சேவை நிறுவனங்கள்‌ 100% பணியாளர்களுடன்‌ நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • அங்கன்வாடி மையங்கள்‌ 1.9.2021 முதல்‌ மதிய உணவு வழங்குவதற்காக செயல்பட அனுமதிக்கப்படும்‌. அங்கன்வாடி மைய ஊழியர்கள்‌ தடுப்பூசி செலுத்தியிருப்பது மாவட்ட ஆட்சியர்கள்‌ உறுதி செய்ய வேண்டும்‌.
  • ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது பேருந்து போக்குவரத்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி இயக்க அனுமதிக்கப்படும்‌.
  • நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி மழலையர்‌ காப்பகங்கள்‌  செயல்பட அனுமதிக்கப்படும்‌. மழலையர்‌ காப்பகங்களின்‌ பொறுப்பாளர்கள்‌, பணியாளர்கள்‌ அனைவரும்‌ தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்‌.
  • நீச்சல்‌ குளங்கள்‌ விளையாட்டு பயிற்சிகளுக்காக மட்டும்‌ 50% பயிற்சியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌. பயிற்சியாளர்கள்‌ மற்றும்‌ 18 வயதுக்கு மேற்பட்ட பயிற்சி பெறுபவர்கள்‌ தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்‌.
  • தமிழ்நாடு திறன்‌ மேம்பாட்டுக்‌ கழகம்‌ மற்றும்‌ மகளிர்‌ மேம்பாட்டு கழகம்‌ மூலம்‌ நடத்தப்படும்‌ வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்புகள்‌ நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்‌. தங்கும்‌ விடுதிகள்‌, கேளிக்கை விடுதிகளில்‌ உள்ள மதுக்கூடங்கள்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.
பொது
  • செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின்‌ பணியாளர்களும்‌, தடுப்பூசி செலுத்தியிருப்பதை தொடர்புடைய நிறுவனங்கள்‌ உறுதி செய்ய வேண்டும்‌.
  • அனைத்து கடைகள்‌ மற்றும்‌ பொது மக்கள்‌ கூடக்கூடிய இடங்களில்‌ பின்வரும்‌ முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தவறாமல்‌ பின்பற்ற வேண்டும்‌.
  • குடைகளின்‌ நுழைவு வாயிலில்‌, கை சுத்திகரிப்பான்௧ள்‌ கட்டாயமாக வைக்கப்படுவதோடு, தானியங்கி உடல்‌ வெப்ப நிலை பரிசோதனை கருவி நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்‌.

  • கடைகளில்‌ பணிபுரிபவர்களும்‌, வாடிக்கையாளர்களும்‌ கட்டாயம்‌ முகக்கவசம்‌ அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம்‌ உறுதி செய்ய வேண்டும்‌.

  • அனைத்து கடைகளும்‌, உரிய காற்றோட்ட வசதியுடன்‌ செயல்படுவதோடு, கடைகளில்‌, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும்‌ வகையில்‌ ஒரே நேரத்தில்‌ அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.

  • கடைகளின்‌ நுழைவு வாயிலில்‌ பொது மக்கள்‌ வரிசையில்‌ காத்திருக்கும்‌ போது, ஒரு நபருக்கும்‌ மற்றொருவருக்கும்‌ இடையே போதுமான இடைவெளி இருக்கும்‌ வகையில்‌ குறியீடுகள்‌ போடப்பட வேண்டும்‌.

  • மேற்படி விதிமுறைகளைப்‌ பின்பற்றாமலும்‌ அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல்‌ வாடிக்கையாளர்களை அனுமதித்தும்‌ செயல்படும்‌ வணிக/இதர நிறுவனங்கள்‌ மீது நடவடிக்கை எடுக்கப்படும்‌.

நோய்த்‌ தொற்று கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்‌
  • நோய்த்‌ தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல்‌, நோய்த்‌ தொற்றுக்குள்ளானவர்களுடன்‌ தொடர்பில்‌ இருந்தவர்களை கண்டறிதல்‌, சிகிச்சை அளித்தல்‌, தடுப்பூசி செலுத்துதல்‌ மற்றும்‌ கொரோனா நோய்த்‌ தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல்‌ ஆகிய கோட்பாடுகள்‌ கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்‌.
  • கொரோனா வைரஸ்‌ நோய்த்‌ தொற்று பரவலைத்‌ தடுப்பதற்கு, நோய்த்‌ தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள்‌ உள்ள பகுதிகளில்‌, நோய்க்‌ கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த்‌ தடுப்பு நடவடிக்கைகளையும்‌ இப்பகுதியில்‌ அனைவருக்கும்‌ தடுப்பூசி செலுத்தவும்‌ மாவட்ட ஆட்சியர்‌ மற்றும்‌ உள்ளாட்சி அமைப்புகள்‌ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்‌.

வரையறுக்கப்பட்ட நோய்க்‌ கட்டுப்பாட்டு பகுதிகளில்‌, பின்வரும்‌ நோய்க்‌ கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்‌ கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்‌.

  • நோய்க்‌ கட்டுப்பாட்டு பகுதிகளில்‌ அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும்‌ அனுமதி அளிக்கப்பட வேண்டும்‌. இந்த நோய்‌ கட்டுப்பாட்டு பகுதிகளில்‌, மருத்துவ அவசர சேவைகள்‌ மற்றும்‌ அத்தியாவசியப்‌ பொருட்கள்‌ வழங்குதல்‌ தவிர, இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை.
  • நோய்‌ கட்டுப்பாட்டு பகுதிகளில்‌, தீவிரமாக நோய்த்‌ தொற்று பரவலை, வீடு வீடாக கண்காணிக்க குழுக்கள்‌ அமைத்து கண்காணிக்கப்படும்‌.
தமிழகத்தில் புதிய ஊரடங்கு தளர்வுகள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க உத்தரவு தமிழகத்தில் புதிய ஊரடங்கு தளர்வுகள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க உத்தரவு Reviewed by Rajarajan on 21.8.21 Rating: 5

கருத்துகள் இல்லை