Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – மாநில அரசு அதிரடி அறிவிப்பு!

 




உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.


சம்பள உயர்வு:

மாநிலம் முழுவதும் கொரானா பரவலால் சுழற்சி முறையில் அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது கொரோனா தொற்று குறைந்து உள்ளதால் முழு பணியாளர்களும் பணிக்கு வர வைக்கப்பட்டுள்ளனர். இதில் சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஊதிய உயர்வை அடுத்த மாதத்திலிருந்து, 7-வது ஊதியக்குழுவின் அடிப்படையில் பெற உள்ளதாக தெரிவித்து இருந்தனர். இதனை அடுத்து உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களும் தங்கள் மாநில அரசு அலுவலர்களுக்கான ஊதிய உயர்வை அறிவித்துள்ளார்.


இதற்கு முன் இருந்த 17 சதவீத அகவிலைப்படி 28 சதவீதமாக அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் அவரது அறிக்கையில், இளைஞர்களுக்கு ஆண்ட்ராய்டு போன் வழங்க ஒதுக்கப்பட்ட தொகை 3000 கோடி, போட்டித் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களின் முழு முயற்சிக்கும், பயிற்சிக்கும் செலவழிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.


இந்த உயர்வால் ஒப்பந்த மற்றும் சாதாரண தொழிலாளர்களும் பயனடைவார்கள் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த ஊதிய உயர்வானது 11 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக மாறியதன் காரணமும் விளக்கப்பட்டுள்ளது. அதாவது ஜனவரி 2020 முதல் தவணைக்கு, 4% உயர்வும், ஜூன் 2020 இல் இரண்டாவது தவணைக்கு, 3% , ஜனவரி 2021 இன் மூன்றாவது தவணைக்கு, 4% உயர்வும் என மூன்று தவணைகள் சேர்த்து அகவிலைப்படி ஊதிய உயர்வு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – மாநில அரசு அதிரடி அறிவிப்பு! அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – மாநில அரசு அதிரடி அறிவிப்பு! Reviewed by Rajarajan on 21.8.21 Rating: 5

கருத்துகள் இல்லை