அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைப்பை தொடர்ந்து E L surrender நிறுத்திவைப்பு - தமிழக அரசு உத்தரவு
அரசின் அனைத்து துறை பணியாளர்களுக்கும் அடுத்த ஓராண்டுக்கான ஊதியத்துடன் கூடிய விடுமுறை (ஈட்டிய விடுப்பு) நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஈட்டிய விடுப்பு:
கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்று பரவல் தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தமிழக அரசு தொற்று நோய்த்தடுப்பு நடவடிக்கைக்காக அதிக அளவிலான பணத்தை செலவழித்து வருகிறது. நோய் காரணமாக தேவையான உபகரணங்கள், மருத்துவ பொருட்களுக்கு அதிக முதலீடு செய்துள்ளது. இதனால் அரசின் கருவூலத்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு பல சிறப்பு திட்டங்களுக்கான பணப்பலன்களை நிறுத்தி உள்ளது.
அந்த வகையில், பொதுவாக அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, கொரோனாவின் இரண்டாவது அலை மற்றும் தொற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கான ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தின் அடிப்படையில், தமிழ்நாட்டின் விதி 7A இன் கீழ் வழங்கப்பட்ட படி ஒவ்வொரு வருடமும் 15 நாட்களுக்கு அல்லது 30 நாட்களுக்கு ஒவ்வொரு முறையும் விடுமுறைக்கான ஊதியத்தை அடுத்த ஆண்டு அதாவது, மார்ச் 31, 2022ம் தேதி வரை நிறுத்தி வைப்பதாக உத்தரவிடப்பட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைப்பை தொடர்ந்து E L surrender நிறுத்திவைப்பு - தமிழக அரசு உத்தரவு
Reviewed by Rajarajan
on
23.8.21
Rating:
கருத்துகள் இல்லை